Theme Check

சார்ஜில் இருந்த செல்போனை தொட்ட சிறுவன் உயிரிழப்பு!!

சார்ஜில் இருந்த செல்போனை தொட்ட சிறுவன் உயிரிழப்பு!!

சார்ஜில் இருந்த செல்போனை தொட்ட சிறுவன் உயிரிழப்பு!!
X

வேலூரில் செல்போனை சார்ஜ் செய்தபோது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்னஅல்லாபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில் – பானுமதி தம்பதியின் மகன் கோபிநாத் (9) கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வந்தான்.

கோடை விடுமுறை என்பதால் கோபிநாத் வீட்டுக்கு வந்திருந்தான். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் பானுமதி செல்போனுக்கு சார்ஜ் போட்டுள்ளார். அப்போது குளித்துவிட்டு வந்த கோபிநாத் ஈரக்கையுடன் செல்போனை தொட்டார்.

cell-phone-charger

அப்போது சார்ஜரில் இருந்து செல்போனை எடுக்கும்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்தது. அதில், கோபிநாத் அலறியபடி சம்பவ இடத்தில் மயங்கி விழுந்தான்.

அதிர்ச்சியடைந்த பானுமதி மகனைத் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சார்ஜரில் இருந்து செல்போனை எடுக்கும்போது மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it