Theme Check

வீடு கட்டுவோருக்கு மகிழ்ச்சி செய்தி..!

வீடு கட்டுவோருக்கு மகிழ்ச்சி செய்தி..!

வீடு கட்டுவோருக்கு மகிழ்ச்சி செய்தி..!
X

கம்பம் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றன. செங்கல் சூளைகளுக்கு தேவைப்படும் களிமண், வண்டல் மண் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனால் தேவாரம் பொட்டிபுரம், ராசிங்காபுரம் பகுதிகளில் இருந்து சூளைகளுக்கு தேவையான மண் கிடைத்தது. ஒரு டிப்பர் லாரி (4 யூனிட்) களிமண் 10000 ரூபாய் வரை விற்பனையானது. இதனால், ஆயிரம் செங்கல் 9000 ரூபாய் வரை விற்பனையானது.

தற்போது, தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள தங்கம்மாள்புரம் பகுதியில் இருந்து கம்பத்திற்கு கொண்டுவரப்படும் 1000 செங்கல் 6000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து, கம்பம் செங்கல் சூளை உரிமையாளர் கிருஷ்ணன் கூறுகையில், “ஆண்டிபட்டி செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு தேவையான களிமண் அருகிலேயே, குறைந்த விலைக்கு கிடைப்பதால் அவர்கள் விலை குறைவாக கொடுக்கின்றனர்.

ஆனால் எங்களுக்கு லாரி வாடகை உள்ளிட்ட கூடுதல் செலவுகள் உள்ளது. இந்த விலை குறைவு எங்களுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆனாலும், வேறு வழியின்றி நாங்களும் விலையை குறைத்துக் கொடுக்க வேண்டியுள்ளது” என்று தெரிவித்தார்.

ஆயிரம் செங்கல்லின் விலை மூன்றாயிரம் ரூபாய் குறைவாக கிடைப்பதால் கம்பம் மாவட்டத்தில் புதிதாக வீடு கட்டுவோர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Next Story
Share it