Theme Check

தம்பி வயசு பத்தாது.. விஜய் ரசிகரின் வேட்புமனு நிராகரிப்பு !

தம்பி வயசு பத்தாது.. விஜய் ரசிகரின் வேட்புமனு நிராகரிப்பு !

தம்பி வயசு பத்தாது.. விஜய் ரசிகரின் வேட்புமனு நிராகரிப்பு !
X

விஜய் மக்கள் இயக்கம் சார்பாக வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர் மனுவை பார்த்து அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அவரிடம் நிலையை எடுத்துக்கூறி நிராகரித்தனர்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களும் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து பிச்சாரத்தில் பிசியாகயுள்ளனர்.

இதனிடையே, அரசியல் கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்களுடன், சுயேச்சை வேட்பாளர்களும் தேர்தல் ரேஸில் களமிறங்குகின்றனர். இதன்காரணமாக உள்ளாட்சி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் சென்னை உட்பட பல மாவட்டங்களில் சுயேட்சையாக களமிறங்குகின்றனர்.

Vijay-makkal-iyakkam-candidate

அந்த வகையில், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளில் போட்டியிட 443 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனையடுத்து வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில், 13 வது வார்டில் விஜய் மக்கள் மன்றம் சார்பில் 19 வயது நிரம்பிய பரணி என்பவர் போட்டியிடுவதற்கு வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

இதனை பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். நகர்புறத் தேர்தலில் போட்டியிடுவதற்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும், இதனால் வயதின் காரணமாக பரணியின் வேட்புமனுவை அதிகாரிகள் நிராகரிக்கத்தனர். இந்த நிலைமையை விஜய் மக்கள் மன்றத்தின் வேட்பாளர் பரணியிடம் எடுத்துக்கூறி அதிகாரிகள் அனுப்பிவைத்தனர்.


newstm.in

Next Story
Share it