Theme Check

97 லட்ச ரூபாய் மோசடி செய்த பிரபல நடிகரின் சகோதரர்!!

97 லட்ச ரூபாய் மோசடி செய்த பிரபல நடிகரின் சகோதரர்!!

97 லட்ச ரூபாய் மோசடி செய்த பிரபல நடிகரின் சகோதரர்!!
X

நிலம் வாங்கி தருவதாக கூறி 97 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் சகோதரர் சுனில் கோபி கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் கிரிதரன் என்பவரிடம் மதுக்கரை அருகே 4.52 ஏக்கர் நிலம் விற்பனைக்கு இருப்பதாக கூறி கேரளாவை சேர்ந்த சுனில்கோபி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அணுகியுள்ளார். நிலம் பிடித்து போகவே முன்பணமாக 97 லட்ச ரூபாய் பணத்தை சுனில்கோபி நண்பர்கள் சிவதாஸ் மற்றும் ரீனா ஆகியோரது வங்கி கணக்குகளில் 97 லட்ச ரூபாய் கொடுத்துள்ளார்.

நிலத்தின் சொத்து ஆவணங்களை சரி பார்த்த போது வில்லங்கம் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்துதொழிலதிபர் கிரிதரன், சுனில்கோபியை அணுகிய போது பணத்தை ஒரு மாதத்தில் திருப்பி கொடுத்து விடுவதாக உறுதியளித்துள்ளார். ஆனால் பணத்தை திருப்பி கொடுக்காமல் கிரிதரனுக்கு சுனில்கோபி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது.

sunil

இதனையடுத்து சுனில் கோபி , சிவதாஸ், ரீனா ஆகிய பேர் மீது கிரிதரன் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இந்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்த கோவை மாவட்ட குற்றபிரிவு போலீசார், கூட்டுசதி, மோசடி, நம்பிக்கை மோசடி, தவறான ஆவணங்களை தயாரித்தல் ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையடுத்து தனிப்படை போலீசார் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில் இருந்த சுனில்கோபியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக இருக்கும் சிவதாஸ் , ரீனா ஆகியோரை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுனில் கோபி சுரேஷ் கோபியின் இரண்டாவது சகோதரர்.

கோவை குற்றபிரிவு போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுனில் கோபி கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

newstm.in

Next Story
Share it