பணத் தகராறில் அண்ணன் குத்திக் கொலை.. பாசக்கார தம்பிக்கு போலீஸ் வலை..!

பணத் தகராறில் அண்ணன் குத்திக் கொலை.. பாசக்கார தம்பிக்கு போலீஸ் வலை..!

பணத் தகராறில் அண்ணன் குத்திக் கொலை.. பாசக்கார தம்பிக்கு போலீஸ் வலை..!
X

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த மேல் அச்சமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (63). இவருடைய தம்பி கோவிந்தராஜ்(54). இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த ஒரு வருடமாக பணத் தகராறு இருந்து வந்துள்ளது.

இந்நிலையில், ஜெயராமன் மனைவி ஜெயலட்சுமி கடந்த 17-ம் தேதி கடைக்கு சென்றுள்ளார். அப்போது, கோவிந்தராஜ் ஜெயலட்சுமியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதை, ஜெயராமன் தட்டி கேட்டுள்ளார். அப்போது கோவிந்தராஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெயராமனின் வயிற்றிலும், தடுக்க வந்த அவரது மனைவி ஜெயலட்சுமி மார்பு பகுதியிலும் குத்தியுள்ளார்.

இதில் படுகாயம் அடைந்த இருவரும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக ஜெயராமன் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து அவரது மகள் ஜெயசுதா கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கோவிந்தராஜை தேடி வருகின்றனர்.

Next Story
Share it