ரூ.4,000 பணத்துக்காக நடத்தப்பட்ட கொடூர கொலை!!
ரூ.4,000 பணத்துக்காக நடத்தப்பட்ட கொடூர கொலை!!

தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்த முத்து (32) என்பவர் முருகன் (34) என்பவருக்கு சொந்தமாக காமநாயக்கன்பாளைத்தில் உள்ள டாஸ்மாக் பாரில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் டாஸ்மாக் பாரில் ரூ.4 ஆயிரம் திருட்டு போயுள்ளது. இதையடுத்து பார் உரிமையாளர் முருகன் சந்தேகத்தின் பேரில் முத்துவை விசாரித்துள்ளார். அப்போது முத்து பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது.
அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதத்தில் முத்து, பார் ஊழியர் முருகனை தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த முருகன் பாரில் முத்துவை பல்லடத்தில் உள்ள தனது ஓட்டலுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு முத்துவை கடுமையாகத் தாக்கியுள்ளனர். மயக்கமடைந்த முத்துவை காரில் வைத்து திண்டுக்கல் கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே முத்து உயிரிழந்தது தெரியவந்ததால் அவரது முகத்தைச் சிதைத்து ரெயில்வே மேம்பாலத்தின் கீழ் உடலை வீசி விட்டு தப்பி சென்றனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக அம்மயநாயக்கனூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்த்த போது முத்துவின் உடலை கொண்டு வந்து வீசி சென்ற காரின் எண் பதிவாகி இருப்பது.

அந்த காரின் பதிவு எண்ணைக் கொண்டு முத்துவை கொலை செய்ததாக டாஸ்மாக் பார் உரிமையாளர் முருகன், பாரில் வேலை பார்த்த கோபால், வீராசாமி, மருதுசெல்வம், கார்த்திக், கவின் மற்றும் டென்னீஸ் உள்பட 7 பேரை கைது செய்தனர்.
newstm.in

