Theme Check

எடப்பாடியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்! பகீர் கிளப்பும் வீடியோ!!

எடப்பாடியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்! பகீர் கிளப்பும் வீடியோ!!

எடப்பாடியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்! பகீர் கிளப்பும் வீடியோ!!
X

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்செங்கோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் கல்லூரிக்குச் சொந்தமான பேருந்து, மாணவா்களுடன் எடப்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது, கனமழை பெய்து கொண்டிருந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி மெதுவாக பயணித்துக் கொண்டிருந்தன.

இந்நிலையில், எடப்பாடி- சங்ககிரி பிரதான சாலையில் வந்துகொண்டிருந்த தனியார் கல்லூரி பேருந்து சற்றும் வேகத்தை குறைக்காமல் முன்னால் சென்ற வாகனங்களை முந்தி செல்ல முயன்றது.

bus 1

அப்போது எதிரில் எடப்பாடியில் இருந்து திருச்செங்கோடு நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்துடன் கல்லூரி பேருந்து நேருக்கு நோ் மோதியது. இதில், இரண்டு பேருந்துகளும் சாலை ஓரத்தில் இருந்த மரத்தின் மீது மோதின.

bus 1

விபத்தில் கல்லூரி வாகனத்தில் வந்த 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், தனியார் பேருந்தில் பயணித்த 10க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனா். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டனர்.

bus 1

தகவலறிந்து வந்த ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர். படுகாயம் அடைந்த பேருந்து ஓட்டுவநர்கள் உள்ளிட்ட 3 பேர் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

விபத்து குறித்து கொங்கணாபுரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா். இரண்டு பேருந்துகளும் மோதிக்கொண்டு விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Next Story
Share it