Theme Check

மார்ச் 31-க்குள்.. நகைக்கடன் பெற்றவர்களுக்கு அமைச்சர் சொன்ன நற்செய்தி..!

மார்ச் 31-க்குள்.. நகைக்கடன் பெற்றவர்களுக்கு அமைச்சர் சொன்ன நற்செய்தி..!

மார்ச் 31-க்குள்.. நகைக்கடன் பெற்றவர்களுக்கு அமைச்சர் சொன்ன நற்செய்தி..!
X

தமிழக பொது பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று காலை 10 மணி அளவில் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.

இந்நிலையில், கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: “தமிழகத்தில், வேளாண் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய தங்க நகைக் கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ், தகுதி உள்ள நபர்களுக்கு மார்ச் 31-ம் தேதிக்குள் நகைகள் திரும்ப வழங்கப்படும்.

அத்துடன், இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதி உள்ள நபர்கள் விடுபட்டிருந்தால், அவர்கள் வங்கியில் விண்ணப்பித்தால் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும்” என்று தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகளின்படி, கூட்டுறவு வங்கிகளில் ஐந்து சவரனுக்கும் குறைவாக தங்க நகைகள் வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அரசு அறிவித்தது.

இந்த திட்டத்துக்கு பல கட்ட மதிப்பீடுகள் செய்யப்பட்டு, தற்போது, மார்ச் 31-ம் தேதிக்குள் கூட்டுறவு வங்கியில் வைக்கப்பட்ட ரூ.6 ஆயிரம் கோடி மதிப்புள்ள நகைக் கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டு, 14.40 லட்சம் பயனாளிகளுக்கு நகைகள் திரும்ப அளிக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.

Next Story
Share it