வரும் ஜூன் 23-ம் தேதி இடைத்தேர்தல்..!!
வரும் ஜூன் 23-ம் தேதி இடைத்தேர்தல்..!!

டெல்லி, பஞ்சாப், உத்தர பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற தொகுதிகளுக்கு ஜூன் 23-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் காலியாக உள்ள 3 மக்களவை தொகுதிகள், 7 சட்டசபை தொகுதிகளுக்கு ஜூன் 23-ல் இடைத்தேர்தல் நடைபெறும். ஜூன் 26ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதையடுத்து அரசியல் கட்சியினர், அதற்கான வேட்பாளர்களை தேர்வு செய்வதில் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.
Next Story

