Theme Check

ப்ளூ டிக் கேட்டார் சிபிஐ அதிகாரி.. ரூ.10,000 அபராதம் விதித்தது ஐகோர்ட்..!

ப்ளூ டிக் கேட்டார் சிபிஐ அதிகாரி.. ரூ.10,000 அபராதம் விதித்தது ஐகோர்ட்..!

ப்ளூ டிக் கேட்டார் சிபிஐ அதிகாரி.. ரூ.10,000 அபராதம் விதித்தது ஐகோர்ட்..!
X

சமூக வலைதள குறும்பதிவு சேவையான ட்விட்டர் தனது பயனாளிகளின் கணக்குகளை சரிபார்த்து, அதன் அதிகாரப்பூர்வ தன்மைக்கு அடையாளமாக வழங்கி வந்த ப்ளூ (நீலம்) டிக் வசதியை மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இதற்கான விண்ணப்ப முறையையும் ட்விட்டர் அறிவித்துள்ளது.

சமூக ஊடக சேவைகளில் ஒவ்வொன்றுக்கும் அடையாளமாக சில அம்சங்கள் இருப்பது போல, குறும்பதிவு சேவையான ட்விட்டரின் அடையாளங்களில் ஒன்றாக அதன் நீல டிக் வசதி அமைந்திருந்தது.
ட்விட்டரில் மீண்டும் 'ப்ளூ' டிக் வசதி... நீங்களும் விண்ணப்பிக்கலாம்! |  Twitter announces new Blue tick facility soon | Puthiyathalaimurai - Tamil  News | Latest Tamil News | Tamil News Online ...
பொதுவாக, பிரபலமான நபர்கள், புகழ்பெற்ற ஆளுமைகள் உள்ளிட்டோரின் ட்விட்டர் பக்கம் அவர்களின் அதிகாரப்பூர்வ பக்கம் என்பதை உறுதி செய்யும் வகையில் இந்த நீல டிக் வசதி அமைந்திருந்தது. இத்தகைய கணக்குகளை சரிபார்க்கப்பட்ட பக்கங்கள் என ட்விட்டர் குறிப்பிட்டு வந்தது.

பிரபலங்கள் பெயரில் மற்றவர்கள் பொய்க் கணக்கு அல்லது கேலிப் பக்கங்களை அமைத்து வந்த சூழலில், இத்தகைய போலி கணக்குகளால் பயனாளிகள் மத்தியில் ஏற்பட்ட குழப்பத்தை தவிர்ப்பதற்காக ட்விட்டர் பிரபலங்களின் கணக்குகளை சரிபார்க்கப்பட்டவை என உணர்த்தும் வகையில் நீல நிற டிக் வசதியை அறிமுகம் செய்தது.
ட்விட்டரில் மீண்டும் 'ப்ளூ' டிக் வசதி... நீங்களும் விண்ணப்பிக்கலாம்! |  Twitter announces new Blue tick facility soon | Puthiyathalaimurai - Tamil  News | Latest Tamil News | Tamil News Online ...
இந்த பக்கங்கள் ‘வெரிஃபைடு’ என குறிப்பிடப்பட்டு, அதன் அடையாளமாக நீல டிக் இருக்கும். இதன்மூலம், அந்தப் பக்கம் குறிப்பிட்ட நபருடைய அதிகாரப்பூர்வ கணக்கு எனத் தெரிந்து கொள்ளலாம்.

இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்திற்கு ப்ளூ டிக் அங்கீகாரம் வழங்கக்கோரி சிபிஐ முன்னாள் இயக்குநர் நாகேஸ்வர ராவ் தொடர்ந்த மனுவை ரூ.10000 அபராதத்துடன் தள்ளுபடி செய்தது டெல்லி உயர்நீதிமன்றம்.
RSS-mukt Bharat' necessary to save Hinduism: Former CBI chief Nageswara Rao  | 'RSS-mukt Bharat' necessary to save Hinduism: Former CBI chief Nageswara  Rao
‘நாகேஸ்வர ராவுக்கு நிறைய நேரம் இருக்கிறது; அதனால், அவர் எங்களிடம் பரிசை எதிர்பார்க்கிறார்’ எனத் தெரிவித்து இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Next Story
Share it