எங்கேயும் எப்போதும் பட பாணியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்- பதறவைக்கும் சிசிடிவி காட்சி!
எங்கேயும் எப்போதும் பட பாணியில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட பேருந்துகள்- பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

எடப்பாடியில் இருந்து ஒரு தனியார் பேருந்து 30ற்கும் மேற்பட்ட பயணிகளுடன் சங்ககிரியை நோக்கி நேற்று மாலை சென்றுக்கொண்டிருந்தது. அப்போது திருச்செங்கோட்டிலிருந்து எதிரே வந்த தனியார் கல்லூரி பேருந்து எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் தனியார் பேருந்தின் ஓட்டுனர் அருணாசலம் பேருந்து எஞ்சின் மேல் தூக்கி வீசப்படும் சிசிடிவி காட்சியும் பயணிகள் அலரும் சத்தமும் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விபத்து நடந்த பேருந்துகளில் படுகாயம் அடைந்தவர்கள் எடப்பாடி, சங்ககிரி, மற்றும் சேலம், உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து கொங்கணாபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
" style="border: 0px; overflow: hidden"" title="YouTube video player" width="560">

