Theme Check

உங்க ரேஷன் கார்டு மூலம் இனி பொருட்கள் வாங்க முடியுமா? - ஒருதடவை செக் பண்ணிக்குங்க ! !!

உங்க ரேஷன் கார்டு மூலம் இனி பொருட்கள் வாங்க முடியுமா? - ஒருதடவை செக் பண்ணிக்குங்க ! !!

உங்க ரேஷன் கார்டு மூலம் இனி பொருட்கள் வாங்க முடியுமா? - ஒருதடவை செக் பண்ணிக்குங்க ! !!
X

நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலம் பொது மக்களுக்கு குறைந்த விலையில், அரிசி, பருப்பு, கோதுமை, எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. ஏழை எளிய மக்கள் ரேஷனில் பயனடைந்து வரும் நிலையில், வசதி படைத்தவர்கள் மற்றும் தகுதியற்ற ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் முறைகேடாக பொருட்களை பெற்று வருவதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், ரேஷன் கார்டு விதிகளில் மாற்றம் செய்ய, உணவு மற்றும் பொது வினியோகத் துறை முடிவு செய்துள்ளது. இதன்படி, ரேஷன் கடைகளில் தகுதி உடைய அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொருட்களின் அளவு மாறக் கூடும் எனத் தெரிகிறது. இதற்காக, புதிய அளவு பட்டியல் தொடர்பாக, மாநில அரசுகளுடன், மத்திய உணவு மற்றும் பொது வினியோகத் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ration card

நாட்டில் போலியான முறையில் ரேஷனைப் பயன்படுத்திக் கொள்ளும் பலர் உள்ளனர். உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் தகவலின்படி, தற்போது நாடு முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை (NFSA) பயன்படுத்தி வருகின்றனர். அவர்களில் பொருளாதார ரீதியாக வசதி படைத்தவர்கள் பலர் உள்ளனர். இதனால் தான் தற்போது அரசு ரேஷன் கார்டு விதிகளை மாற்றப் போவதாகக் கூறப்படுகிறது. மாநில அரசுகள் அளித்துள்ள பரிந்துரைகளை மனதில் கொண்டு, புதிய தரநிலைகள் தயாரிக்கப்பட்டு, விரைவில் இறுதி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.

நாட்டில் பெரும்பாலான மாநிலங்களில், 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்' செயல்படுத்தப்பட்டு உள்ளது. தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வரும் கோடிக் கணக்கான பயனாளிகள் அதாவது 86 சதவீத மக்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தகுதியற்ற மற்றும் போலியான ரேஷன் கார்டுகளை ரத்து செய்யவும் அதிகாரிகள் பரிசீலித்து வருவதாகக் கூறப்படுகிறது.

newstm.in

Next Story
Share it