Theme Check

நீரிழிவு நோயாளிகளை காசநோய் தாக்குமா..?: சுகாதார நிறுவன விஞ்ஞானி விளக்கம்..!

நீரிழிவு நோயாளிகளை காசநோய் தாக்குமா..?: சுகாதார நிறுவன விஞ்ஞானி விளக்கம்..!

நீரிழிவு நோயாளிகளை காசநோய் தாக்குமா..?: சுகாதார நிறுவன விஞ்ஞானி விளக்கம்..!
X

நீரிழிவு மற்றும் காசநோய் இரண்டும் மற்றொன்றின் நிகழ்வைத் தூண்டும் என்பதை தேசிய சுகாதார நிறுவனம் நடத்திய ஆராய்ச்சி உறுதிபடுத்தியுள்ளது.

இதுகுறித்து தேசிய சுகாதார நிறுவன விஞ்ஞானி மற்றும் அறிவியல் இயக்குநர் (ஐசிஇஆர்), டாக்டர் சுபாஷ் பாபு கூறுகையில், “நீரிழிவு நோய் இருந்தால், காச நோய் அபாயத்தை அது அதிகரிக்கும். காசநோய் இருப்பின் அதன் மூலம், நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

நீரிழிவு, காசநோய் அறிகுறிகளை மோசமாக்கலாம் அல்லது காசநோய் எதிர்ப்பு சிகிச்சைக்கு பதிலளிக்கத் தவறிவிடும். நீரிழிவு நோய் இருந்தால், காசநோய் குணப்படுத்தப்பட்ட பின்னரும், மீண்டும் காச நோய் வருவதற்கான அதிக ஆபத்து உள்ளது.

உலக மக்கள் தொகையில் கால் பகுதியினர் காசநோய் பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டுள்ளனர், இவர்களில் பத்தில் ஒருவர் மட்டுமே காசநோயால் பாதிக்கப்படுகிறார்.

ஆனால், ஒருவருக்கு இணை நோயாக, நீரிழிவு நோய் இருப்பின், இந்த நபர்களுக்கு காசநோய் வெளிப்படும் அபாயம் மூன்று மடங்கு அதிகமாகிறது.

காசநோய் காரணமாக ஒருவரது உடலில், அழுத்தம் - தூண்டப்பட்ட ஹைப்பர் கிளைசீமியா எனப்படும் ஒரு செயல்முறையைத் தூண்டலாம்.

எனவே, நீரிழிவு நோயாளிகள் அல்லாதவர்களுக்கும் நீரிழிவு அபாயத்தை அதிகரிக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு காசநோய் குணப்படுத்தக்கூடியது; ஆனால், காசநோய் சிகிச்சை தோல்வியடையும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. அதே போல் மீண்டும் காசநோயால் நோய்வாய்ப்படும் அபாயமும் உள்ளது.

காசநோயாளிகளின் நுரையீரல்கள், நீரிழிவு நோய் இருப்பதால் ஏற்படும் விரிவான சேதம் காரணமாக மெதுவாகவே குணமடைகிறது. இந்த நோயாளிகள் சிகிச்சை முடிந்த பிறகும் 2 ஆண்டுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார்.

Next Story
Share it