Theme Check

தேர்வர்களே, இந்த தேதிகளில் திருத்தம் செய்யலாம்.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!

தேர்வர்களே, இந்த தேதிகளில் திருத்தம் செய்யலாம்.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!

தேர்வர்களே, இந்த தேதிகளில் திருத்தம் செய்யலாம்.. ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு..!
X

ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்பும் தேர்வர்கள், வரும் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

இந்திய அரசால் இயற்றப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் படி, ஆசிரியர் நியமனத்திற்கான குறைந்தபட்சக் கல்வித் தகுதியாக ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தமிழகத்தில், இதற்கான தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2022-ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 எழுதுவதற்கான அறிவிப்பு கடந்த மார்ச் 7-ம் தேதி வெளியானது. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 14-ம் தேதி முதல் ஏப்ரல் 26-ம் தேதி வரை பெறப்பட்டன.

இந்நிலையில், ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய விரும்பும் தேர்வர்கள், தாள்-1, தாள் 2-க்கு வரும் 11-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கு 2,30,878 பேரும், தாள் 2-க்கு 4,01,886 என மொத்தமாக 6,32,764 பேர் விண்ணப்பித்துள்ளனர் என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

Next Story
Share it