அாிசி பையில் கஞ்சா.. ?அதிர்ச்சியில் அதிகாரிகள்..!!
அாிசி பையில் கஞ்சா.. ?அதிர்ச்சியில் அதிகாரிகள்..!!

கட்ச் மாவட்டத்தில் உள்ள கடற்பகுதிக்கு அருகில் உள்ள க்ரீக் என்ற இடத்தில் இருந்து 10 கஞ்சா பொட்டலங்களை எல்லை பாதுகாப்பு படையினா் பறிமுதல் செய்துள்ளனா்.
போலீசார் அங்குள்ள வரயா தார் தீவில் ரோந்து பணியில் ஈடுபட்ட போது சந்தேகத்திற்குாிய வகையில் சில பொட்டலங்கள் கீழே கிடந்து உள்ளது. அந்த பொட்டலங்களின் மேலே ‘கோப்ரா பிராண்ட் கோஹினூர் பாசுமதி ரைஸ்’ என எழுதி இருந்தது.

அதனை பாிசோதித்த பாதுகாப்பு படையினா் அதில் கஞ்சா இருந்ததை கண்டிபிடித்தனா். கட்ச் கடற்பகுதி பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ளது. எனவே இந்த பொட்டலங்கள் பாகிஸ்தானில் இருந்து கரை ஒதுங்கியிருக்கலாம் என சந்தேகம் தொிவித்துள்ளனா்.
கடந்த மே மாதம் முதல் இதுவரை சுமாா் 1,516-க்கும் மேற்பட்ட கஞ்சா பொட்டலங்களை அந்த பகுதிகளில் இருந்து பாதுகாப்பு படையினா் மீட்டு உள்ளனா்.
இந்த பகுதியில், எல்லை பாதுகாப்பு படையினர், உள்ளூர் காவல்துறை, இந்திய கடலோர காவல்படை மற்றும் சுங்க அதிகாரிகள் ஜகாவ் கடற்கரை மற்றும் க்ரீக் பகுதியில் பல பொட்டலங்களை மீட்டுள்ளனர்.

கட்ச் மாவட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையினா் மற்றும் போலீசார் இணைந்து அரபிக்க கடற்பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 250 கோடி மதிப்புள்ள 49 ஹெராயின் பாக்கெட்டுகளை மீட்டுள்ளனர்.

