காலை 9 மணிக்கு நீதிபதிகள் பணிக்கு வர முடியாதா? - உச்ச நீதிமன்றம் கேள்வி !!
காலை 9 மணிக்கு நீதிபதிகள் பணிக்கு வர முடியாதா? - உச்ச நீதிமன்றம் கேள்வி !!

காலை 7 மணிக்கே மாணவர்கள் பள்ளிக்கு செல்லும்போது, காலை 9 மணிக்கு நீதிபதிகள் பணிக்கு வர முடியாதா என்று உச்ச நீதிமன்ற நீதிபதி யு.யு.லலித் கேள்வி எழுப்பியுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் தற்போது காலை 10.30 மணி முதல் மாலை 4 மணி வரை வழக்குகள் மீது விசாரணை நடைபெறுகிறது. மதியம் 1 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை உணவு இடைவேளை விடப்படுகிறது. இந்த சூழலில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் யு.யு.லலித், ரவீந்திர பட், சுதான்ஸு அடங்கிய அமர்வு நேற்று 9.30 மணிக்கு வழக்கு ஒன்றின் விசாரணையை தொடங்கியது.

அப்போது நீதிபதி யு.யு.லலித் கூறியதாவது, காலை 7 மணிக்கே மாணவர்கள் பள்ளி செல்லும்போது காலை 9 மணிக்கு நீதிபதிகள் பணிக்கு வர முடியாதா?. முன்கூட்டியே நீதிமன்றத்துக்கு வந்தால் வழக்குகளை விரைந்து விசாரிக்க முடியும். காலை 9 மணிக்கு தொடங்கி பிற்பகல் 2 மணி வரை வழக்குகளை விசாரிக்கலாம். இடையில் 11.30 மணிக்கு அரைமணி நேரம் இடைவெளி விடலாம்.
அதனைத்தொடர்ந்து பிற்பகலில் நீதிபதிகள் தங்கள் பணிகளை நீதிமன்றத்தில் மேற்கொள்ளலாம், என நீதிபதி புதிய யோசனை ஒன்றை தெரிவித்தார்.
அநேகமாக இத்திட்டம் அமலுக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, தற்போதைய தலைமை நீதிபதிஎன்.வி.ரமணா அடுத்த மாதம் ஓய்வு பெறுகிறார். அவருக்கு அடுத்து மூத்த நீதிபதி யு.யு.லலித் புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்க உள்ளார். அவர் பதவியேற்ற பிறகு உச்ச நீதிமன்ற பணி நேரத்தில் மாற்றம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
newstm.in

