Theme Check

பெற்றோரின் கவனக்குறைவு... கொதிக்கும் ரசம் கொட்டி ஒரு வயது குழந்தை பரிதாப பலி..!!

பெற்றோரின் கவனக்குறைவு... கொதிக்கும் ரசம் கொட்டி ஒரு வயது குழந்தை பரிதாப பலி..!!

பெற்றோரின் கவனக்குறைவு... கொதிக்கும் ரசம் கொட்டி ஒரு வயது குழந்தை பரிதாப பலி..!!
X

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள ஒட்டை கிராமத்தை சேர்ந்தவர் ராஜாமணி (29). இவரது மனைவி கோமளா. இவர்களுக்கு ஒரு வயதில் தவான் என்ற ஆண் குழந்தை உள்ளது. ராஜாமணி வெளியே சென்ற நிலையில், வீட்டில் கோமளாவும், குழந்தை தவான் மட்டும் இருந்துள்ளனர்.

baby

அப்போது, வீட்டில் சமைத்து கொண்டிருந்த கோமளா, அடுப்பில் இருந்து கொதிக்க கொதிக்க ரசத்தை அறையில் உள்ள கட்டிலின் கீழ் வைத்துள்ளார். கட்டில் மீது விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவான் எதிர்பாராதவிதமாக ரசம் வைத்திருந்த பாத்திரத்தில் தவறி விழுந்துள்ளான்.

இதில் குழந்தையின் உடல் முழுவதும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் அலறி துடித்த குழந்தையை தாய் கோமளா அக்கம் பக்கத்தினர் உதவியுடன் வானூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

Jipmer

பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு கடந்த 10 நாட்களக்கும் மேலாக குழந்தை சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று காலை குழந்தை தவான் பரிதாபமாக உயிரிழந்தான். இது குறித்து வானூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Next Story
Share it