மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி
மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜ் மீது வழக்குப்பதிவு.. ரசிகர்கள் அதிர்ச்சி

மலையாள நடிகர் ஜோஜூ ஜார்ஜின் மீது சட்டவிரோத ஜீப் ரேஸில் கலந்துகொண்டதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மலையாள திரையுலகின் பிரதான நடிகராக வலம் வருபவர் 'ஜோஜூ ஜார்ஜ். 'ஜோசப்' படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய 'ஜெகமே தந்திரம்' படத்தில் நடித்திருந்தார். இவருக்கு தமிழகத்திலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில் ஜோஜூ ஜார்ஜ், கேரள மாநிலம் லாகமணியில் உள்ள எஸ்டேட் பகுதியில் நடந்த பந்தயத்தில் தனது ஜீப்புடன் பங்கேற்றுள்ளார். அவர் வேகமாக ஜீப்பை ஓட்டிச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வைரலாக பரவின. அனுமதியின்றி ஜீப் பந்தயம் நடைபெற்றதே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் பிரபலமான நடிகர் ஒருவர் விதிகளை மீறி அதில் பங்கேற்றது மேலும் சர்ச்சையை அதிகப்படுத்தியது. இதையடுத்து அவர் மீது விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக ரேஸில் பங்கேற்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு இடுக்கி ஆர்டிஓ மற்றும் வண்டிப்பெரியார் இணை ஆர்டிஓ ஆகியோர் பொறுப்பேற்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேரில் ஆஜராகுமாறு ஜோஜூ சார்ஜூக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கேரள மாணவர் சங்கம் (KSU) அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஜீப் ரேஸ் நடந்த வாகமன் கண்ணம்குளத்தில் உள்ள அரப்புக்காடு பகுதியில், சட்டப்படி விவசாயத்தைத் தவிர வேறு எந்த நடவடிக்கையிலும் ஈடுபட அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

