வாசலில் சிறுநீர் கழித்த வழக்கு.. டாக்டர் சுப்பையா கைது..!
வாசலில் சிறுநீர் கழித்த வழக்கு.. டாக்டர் சுப்பையா கைது..!

கடந்த 2020-ம் ஆண்டு, அடுக்குமாடி குடியிருப்பு வாசலில் சிறுநீர் கழித்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் ஏபிவிபி அமைப்பின் முன்னாள் தலைவரும், டாக்டருமான சுப்பையாவை ஆதம்பாக்கம் போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.
சென்னை ஆதம்பாக்கத்தில், மூதாட்டியின் வீட்டு வாசலில் தவறாக நடந்து கொண்ட வழக்கில் ஏபிவிபி அமைப்பின் (ஆர்எஸ்எஸ் மாணவர் பிரிவு) முக்கிய நிர்வாகியும், மருத்துவருமான சுப்பையா சண்முகம் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

அடுக்குமாடி குடியிருப்பில் பார்க்கிங் பிரச்னையால் மூதாட்டியின் வீட்டு வாசலில் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது சென்னை ஆதம்பாக்கம் போலீஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை புற்றுநோய்த்துறை தலைவர் பதவியில் இருந்து சுப்பையா ஏற்கனவே நீக்கம் செய்யப்பட்டார்.
தஞ்சை பள்ளி மாணவி விவகாரத்தில் முதல்வர் வீட்டு முன் ஆர்ப்பாட்டம் நடத்திய ஏபிவிபி அமைப்பினரை சிறையில் சந்தித்தாக சுப்பையா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

