Theme Check

அடுத்தடுத்து சிக்க இருக்கும் பிரபலங்கள்.. நடிகை சித்ரா மரணத்தை கையில் எடுக்கும் சவுக்கு ?

அடுத்தடுத்து சிக்க இருக்கும் பிரபலங்கள்.. நடிகை சித்ரா மரணத்தை கையில் எடுக்கும் சவுக்கு ?

அடுத்தடுத்து சிக்க இருக்கும் பிரபலங்கள்.. நடிகை சித்ரா மரணத்தை கையில் எடுக்கும் சவுக்கு ?
X

சின்னத்திரை நடிகை விஜே சித்ரா கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரது மரணம் தொடர்பான மர்மம் தற்போது வரை தொடர்கிறது. இந்த வழக்கில் சித்ராவுடன் வசித்து வந்த கணவர் ஹேம்நாத் என்பவர் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார்.

chithra case

ஆனால், சித்ராவுடன் பலரும் நெருக்கமாக இருந்துவிட்டு பின்னர் சித்ராவுக்கு தொல்லை கொடுத்து வந்தனர் என்றும் அந்த ரகசியங்கள் ஹேம்நாத் மூலமாக வெளியில் கசிந்துவிட கூடாது என்பதற்காகவே சித்ரா ஹேம்நாத்தை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பிறகு அவர் தன் உயிரை மாய்த்துக்கொண்டார் என்றும் தகவல் சொல்லப்படுகிறது.

chithra case

சித்ரா வழக்கை பொறுத்தவரை தொடர்ந்து பல முக்கிய புள்ளிகளின் பெயர் அடிபடுகிறது. ஆனால், அதை தெரிந்தவர்கள், சித்ராவுக்கு நெருக்கமானவர்கள் அதுகுறித்து பேசாமல், உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். குறிப்பாக சித்ராவை காதலித்து, அவரது நிழலில் வாழ்ந்து வந்த ஹேம்நாத்தே பல ரகசியங்களை வெளியில் சொல்ல பயப்படுகிறார்.

மனைவியின் தற்கொலைக்கு காரணமானவர்களை சட்டத்தின் முன் நிறுத்தாமல் தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள முற்படும் ஹேம்நாத் உண்மையில் சித்ராவை காதலித்திருப்பாரா என்ற சந்தேகங்களும் எழுகிறது. மேலும், சித்ராவை அரசியல் புள்ளிகளுக்கு அவரே அனுப்பி வைத்திருக்க முகாந்திரங்கள் உண்டு என்றும் பிரபல புலனாய்வு பத்திரிகையில் தகவல் வெளியானது.

chithra case

இந்த நிலையில், சித்ராவின் தற்கொலைக்கு உண்மையான நீதி வேண்டும் என்றால் வேறொருவர் இந்த விவகாரத்தை கையில் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் கிளம்பியுள்ளன. அதாவது, சவுக்கு சங்கர் இந்த விவகாரம் குறித்து பேச வேண்டும் என்ற கோரிக்கை சமூகவலைதளங்களில் எழுந்துள்ளது. ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடு காட்டாமல் பல மர்மங்களை ஆதாரத்துடன் விளக்கி வருகிறார் சவுக்கு சங்கர்.
சித்ரா வழக்கில் முன்னாள் அமைச்சர், முன்னால் எம்எல்ஏ மகன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படும் நிலையில் சவுக்கு சங்கர் ஏன் இதை குறித்து பேசாமல் இருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் வினவியுள்ளனர்.

saukku sankar

சித்ராவுக்கு கஞ்சா அடிக்கும் பழக்கம் இருக்கிறது, அவரது அறைக்குள் பாக்கெட் பாக்கெட்டாக ஆணுறை இருந்தது என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது உண்மையா என்பது கூட இதுவரை உறுதிசெய்யப்படவில்லை. சித்ரா விடுதிக்கு விஐபி கார் வந்து சென்றதன் பின்னணி என்னவாக இருக்கும் என்ற சந்தேகங்களுக்கு இன்னமும் தீர்வு இல்லை என்பதால், சவுக்கு சங்கர் இந்த விவகாரத்தை கையில் எடுக்க நெட்டிசன்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

newstm.in

Next Story
Share it