செல்போன் எண்.. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் இறையன்பு எச்சரிக்கை !!
செல்போன் எண்.. ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் இறையன்பு எச்சரிக்கை !!

விடுமுறை எடுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் செல்லும் இடங்களையும், முகவரியையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்களை எடுத்தும், அதிகாரிகளுக்கு உத்தரவுகளை பிறப்பித்தும் வருகிறார்.
அந்தவகையில், தற்போது ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, விடுமுறை எடுக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் செல்லும் இடங்களையும், முகவரியையும் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், விடுமுறையில் செல்லும் போதும் அவசர காலங்களில் தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக மாற்று தொலைபேசி எண்களையும் தெரிவிக்க வேண்டும் என்றும், இந்த உத்தரவை அனைத்து ஐஏஎஸ் அதிகாரிகளும் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக கடந்த டிசம்பம் மாதம், ஐஏஎஸ் அதிகாரிகள் அனைவரும் அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கடிதம் எழுதியிருந்தார். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பெயரிலோ அல்லது அவர்களின் குடும்பத்தினரின் பெயரோலோ இருக்கும் அசையா சொத்துகள் குறித்த முழு விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in