Theme Check

நம்மாழ்வார் பாடிய கோவிலில் செல்போன் டவர்.. மதுரை எம்பி விளக்கம்..!

நம்மாழ்வார் பாடிய கோவிலில் செல்போன் டவர்.. மதுரை எம்பி விளக்கம்..!

நம்மாழ்வார் பாடிய கோவிலில் செல்போன் டவர்.. மதுரை எம்பி விளக்கம்..!
X

சமீபத்தில், ‘மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் செல் பேசி டவர். 1400 வருட பழமையான மண்டபம் மைல் வைக்க ASI அனுமதி பெற்றனரா..? நம்மாழ்வார் பாடிய கோவில் மண்டபத்தில் வாடகை சம்பாதிக்க HRCE கேவலம்’ என, சமூக வலைதளங்களில் தகவல் பரவியது.

இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் விளக்கம் அளித்துள்ளார். அவர் இன்று (21-ம் தேதி) தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரை, திருமோகூர் காளமேகப் பெருமாள் கோவிலில் செல்பேசி டவர்.

நம்மாழ்வார் பாடிய கோவிலில் வாடகை சம்பாதிக்க HRCE அராஜகம் என்று வாட்ஸ்அப் செய்திகள் பகிரப்படுகிறது. இது உண்மையல்ல.

கோபுர பாதுகாப்புக்காக கடந்த 2014-ம் ஆண்டு நிர்வாகத்தின் சார்பில் பொருத்தப்பட்ட இடிதாங்கி கோபுரமாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story
Share it