Theme Check

செம அப்டேட்.. வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் பயனர்களுக்கு புதிய வசதி !!

செம அப்டேட்.. வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் பயனர்களுக்கு புதிய வசதி !!

செம அப்டேட்.. வாட்ஸ்அப்பில் வாய்ஸ் மெசேஜ் அனுப்பும் பயனர்களுக்கு புதிய வசதி !!
X

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதிய அம்சங்களை கொண்டுவந்த வண்ணம் உள்ளது என்றுதான் கூறவேண்டும். இந்நிறுவனம் கொண்டுவரும் ஒவ்வொரு அம்சங்களும் மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது. இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் தற்போது புதிய அப்டேட் ஒன்றை பயனாளர்களுக்கு கொடுத்துள்ளது.

அதாவது வாட்ஸ்அப்பில் டைப் செய்து தகவல் அனுப்புவர்கள். சிலர், வாய்ஸ் மூலம் அதாவது தங்கள் குரலிலேயே தகவல்களை பதிவு செய்து அனுப்புவது வழக்கம். தற்போது இந்த வாய்ஸ் மெசேஜ் வசதியில் தான் புதிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

whatsapp

வாட்ஸ்அப் செயலியில் யாராவது வாய்ஸ் மெசேஜ் அனுப்பினால் அவருடைய பெயரை கிளிக் செய்து, சாட் விண்டோவில் தான் அவர் அனுப்பிய மேசேஜ்ஜை கேட்க முடியும். குறிப்பாக ஒருவருடைய சாட் விண்டோவில் இருந்து வெளியே வந்துவிட்டால் அந்த வாய்ஸ் மேசேஜ் ஆனது தானாக நின்றுவிடும். இதனால் அந்த வாய்ஸ் முடியும் வரை அந்த விண்டோவை அப்படியே வைத்திருக்க வேண்டும்.

தற்போது வெளியிட்டுள்ள அப்டேட் மூலம், வாட்ஸ்அப்பில் நாம் வாய்ஸ் மெசேஜ்ஜை பிளே செய்துவிட்டு, சாட் விண்டோவில் இருந்து வெளியே வந்தாலும் பின்புறத்தில் வாய்ஸ் பிளே ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதேபோன்று ஆடியோ ஃபைல்களையும் பிளே செய்யலாம் கூறப்படுகிறது.

whatsapp

எனினும் புதிய அப்டேட் தற்போது ஆப்பிள் ஐபோனுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஐ.ஓஎஸ் வெர்சன் 22.4.75 வைத்திருப்பவர்கள் இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தலாம். ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் எப்போது கிடைக்கும் எனத் தகவல் வெளிவரவில்லை.

இந்த அப்டேட் குறித்து, சுருக்கமாக கூறவேண்டும் என்றால், ஒருவருடைய வாய்ஸ் மெசேஜ்ஜை கேட்டுக்கொண்டே பிறரிடம் சாட் செய்வதற்கு வசதியாக இந்த அம்சம் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in


.

Next Story
Share it