ஜூன் 30 வரைதான் காலக்கெடு - மத்திய அரசு அறிவிப்பு..!!

ஜூன் 30 வரைதான் காலக்கெடு - மத்திய அரசு அறிவிப்பு..!!

ஜூன் 30 வரைதான் காலக்கெடு - மத்திய அரசு அறிவிப்பு..!!
X

ஆதார் எண்ணுடன் பான் கார்டை இணைக்காவிட்டால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) தெரிவித்துள்ளது.இணைக்கப்படாத அனைத்து பான் கார்டுகளும் செல்லாத பான் கார்டாக அறிவிக்கப்படும் என்று சமீபத்தில் CBDT அறிவித்திருந்தது. ஆனால் அதன் பிறகும் பலர் ஆதார் மற்றும் பான் கார்டுகளை இணைக்காமல் இருந்ததால், காலக்கெடு மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. அதாவது, மார்ச் 31 2023 வரை ஆதார் மற்றும் பான் கார்டு எண்ணை இணைக்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது பான்-ஆதார் இணைக்காத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் CBDT அறிக்கை வெளியிட்டது.

ஜூன் 30, 2022க்குள் ஆதார் எண்ணுடன் பான் கார்டு எண்ணை இணைக்கவில்லை என்றால், வருமான வரிச் சட்டம், 272N பிரிவின் படி நீங்கள் 500 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். ஜூலை 1 ம் தேதிக்கு மேற்பட்டு, அபராதத் தொகை ரூ. 1000 ஆக அதிகரிப்பட்டுள்ளது. ஜூன் 30 ஆம் தேதிக்குள் ஆதார்-பான் கார்டு இணைப்பதற்கு ரூ. 500 அபராதமாக செலுத்த வேண்டும்.

வருமான வரித்துறை சட்டம்படி, பான் எண்ணை வழங்க வேண்டிய ஒவ்வொரு முறையும் செயலிழந்த பான் எண்ணை வழங்க முடியவில்லை என்னும் போது நீங்கள் ரூ.10,000 அபராதமாக செலுத்த வேண்டும்.

Tags:
Next Story
Share it