Theme Check

இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!

இந்த 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!!
X

தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தேனி, திண்டுக்கல், விருதுநகர் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இன்று முதல் 14ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலின் சில பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain 1

இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

13.06.2022, 14.06.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Sea Rough

இன்றும், நாளையும் தென்மேற்கு மற்றும் மத்திய கிழக்கு அரபிக்கடல், தெற்கு மகாராஷ்டிரா, கோவா , கேரளாகர்நாடகா கடலோரப் பகுதிகள் மற்றும் இலட்சத்தீவுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமெனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

newstm.in

Next Story
Share it