Theme Check

இந்த மாவட்டங்களில் இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பு!!

இந்த மாவட்டங்களில் இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பு!!

இந்த மாவட்டங்களில் இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்பு!!
X

தமிழகத்தில் வடகடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் வருகிற 6 முதல் 7ஆம் தேதி வரை என இரண்டு நாட்கள் வடகடலோர தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

rain 1

ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.

காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summer 1

அதேசமயம் மீனவர்களுக்கான எந்தவித எச்சரிக்கையும் வானிலை ஆய்வு மையத்தால் இதுவரை எடுக்கப்படவில்லை என சென்னை வானிலை ஆய்வு மையத் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it