Theme Check

#BIG NEWS:- வங்கி விதிகளில் மாற்றம்.. பணம் செலுத்தவும், எடுக்கவும் இந்த ஆவணங்கள் கட்டாயம்..!

#BIG NEWS:- வங்கி விதிகளில் மாற்றம்.. பணம் செலுத்தவும், எடுக்கவும் இந்த ஆவணங்கள் கட்டாயம்..!

#BIG NEWS:- வங்கி விதிகளில் மாற்றம்.. பணம் செலுத்தவும், எடுக்கவும் இந்த ஆவணங்கள் கட்டாயம்..!
X

இந்த மாத தொடக்கத்தில் வங்கி விதிகளில் திருத்தம் செய்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது. புதிய விதிகளின்படி, 20 லட்சம் ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்வதற்கும், திரும்பப் பெறுவதற்கும் பான் மற்றும் ஆதார் ஆவணங்கள் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டம் கூட்டுறவு வங்கிகள் மற்றும் அஞ்சல் அலுவலக வைப்புகளுக்கும் பொருந்தும். மத்திய நேரடி வரிகள் வாரியம் (சிபிஇசி) வெளியிட்டுள்ள அறிக்கையில், நடப்புக் கணக்கு தொடங்குவதற்கும் புதிய விதிகள் பொருந்தும் என்று தெரிவித்துள்ளது.

முன்பு, பணத்தை டெபாசிட் செய்யும்போது மட்டுமே ஆவணங்கள் தேவைப்பட்டது. அதாவது, ஒரு நாளைக்கு 50,000 ரூபாய்க்கு மேல் டெபாசிட் செய்யும்போது மட்டுமே பான் கார்டு தேவைப்பட்டது, மேலும் 114பி விதியின் கீழ் பணத்தை டெபாசிட் செய்யவோ அல்லது எடுக்கவோ வருடாந்திர வரம்பு இல்லை.

வருமான வரித்துறையால் அதிக அளவு பணத்தை கண்காணிக்க முடியும் என்பதால் நிதி மோசடிகளை குறைக்கும் வகையில் புதிய விதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன. கூடுதலாக, வருமான வரித்துறை இந்த விதிகள் மூலம் பணப்புழக்கத்தை விரைவாக கண்காணிக்க முடியும்.

வங்கிகளில் பணம் எடுப்பதற்கும் டெபாசிட் செய்வதற்கும் பான் மற்றும் ஆதார் கட்டாயம் என மத்திய அரசு பிறப்பித்துள்ள புதிய விதிகள் இன்று (மே 26-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது.

Next Story
Share it