Theme Check

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம் ..!!

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம் ..!!

தமிழகத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றம் ..!!
X

கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டிருந்த நிலையில் மாணவர்கள் திறனை மேம்பாடு அடையச் செய்ய பள்ளிக்கல்வித்துறை பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கான வேலை நேரத்தை மாற்ற பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் காலை சிற்றுண்டி வழங்கப்படும் எனவும் அதற்கேற்ப பள்ளிகள் செயல்படும் நேரமும் மாற்றியமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக அரை மணி நேரம் முன்னதாக பள்ளிகள் நேரம் மாற்றியமைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய நடைமுறை அடுத்த கல்வியாண்டு தொடக்க நாளான ஜூன் 13ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

அதுமட்டுமில்லாமல், தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி நேரத்திற்குப் பிறகு பள்ளிகளிலேயே ‘ஸ்போக்கன் இங்கிலீஷ்’ வகுப்புகளை நடத்த பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவை உரையில் அரசு பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும்.

முதற்கட்டமாக சில மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், தொலைதூர கிராமங்களிலும் இத்திட்டம் தொடங்கப்படும். பின்னர் படிப்படியாக இத்திட்டம் விரிவுபடுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் காலையில் சிற்றுண்டி சாப்பிட ஏதுவாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட உள்ளது என்றும் ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறந்ததும் புதிய நேரம் அமலுக்கு வருகிறது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

Next Story
Share it