Theme Check

புதிய சாதனை படைத்துள்ள சென்னை செஸ் ஒலிம்பியாட்!!

புதிய சாதனை படைத்துள்ள சென்னை செஸ் ஒலிம்பியாட்!!

புதிய சாதனை படைத்துள்ள சென்னை செஸ் ஒலிம்பியாட்!!
X

44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் ஜூலை 28ஆம் தேதி முதல் ஆகஸ்டு 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகின் மிகப்பெரிய செஸ் போட்டியான இது இந்தியாவில் நடைபெறுவது இதுவே முதல் முறை.

ஓபன் மற்றும் பெண்கள் ஆகிய இரண்டு பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது. தமிழக அரசின் பங்களிப்புடன் நடைபெற உள்ள இந்த போட்டியில் பங்கேற்க இதுவரை 187 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதிவு செய்துள்ளனர்.

அதாவது ஓபன் பிரிவில் 189 அணிகளும்,பெண்கள் பிரிவில் 154 அணிகளும் என மொத்தம் 343 அணிகள் கலந்து கொள்கின்றன. செஸ் ஒலிம்பியாட்டில் 187 நாடுகளில் இருந்து இத்தனை அணிகள் பங்கேற்க இருப்பது எண்ணிக்கையில் புதிய சாதனை.

chess

இதற்கு முன்பு 2018ஆம் ஆண்டு ஜார்ஜியாவில் நடந்தபோட்டியில் 179 நாடுகளில் இருந்து 184 (ஓபன்) மற்றும் 150 (பெண்கள் பிரிவு) அணிகள் கலந்து கொண்டதே அதிகபட்சமாக இருந்தது. இந்த தகவலை அகில இந்திய செஸ் சம்மேளன செயலாளரும், போட்டிக்கான இயக்குனருமான பரத் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

போட்டியை நடத்தும் நாடு என்பதால் இந்தியா இரு பிரிவிலும் ஏற்கனவே கூடுதலாக ஒரு அணியை அறிவித்துள்ளது. அத்துடன் 3ஆவதாக ஒரு அணியை இடம் பெற செய்யவும் இந்தியாவுக்கு வாய்ப்பு உண்டு.

newstm.in

Next Story
Share it