சென்னை மாநகராட்சி அதிரடி..!! இதை செய்ய தவறினால் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை!!
சென்னை மாநகராட்சி அதிரடி..!! இதை செய்ய தவறினால் தனியார் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை!!

தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றுமாறு தொடர்ந்து ஆட்சியர்களுக்கும், அதிகாரிகளுக்கும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 596 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 295 பேர், செங்கல்பட்டில் 122 பேர், கோவையில் 31 பேர் உள்பட 26 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி இருந்தது.
இந்நிலையில், தனியார் மருத்துவமனைகள் கொரோனா தினசரி விவரங்களை அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளித்தால், அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினால் தகவல் அளிக்க வேண்டும் என்றும் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோரின் விவரங்களையும் மாநகர நல அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என்றும் தினசரி விவரங்களை அளிக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

