சென்னை மின்சார ரயில் விபத்து – ஓட்டுநர் பணியிடை நீக்கம்!!
சென்னை மின்சார ரயில் விபத்து – ஓட்டுநர் பணியிடை நீக்கம்!!

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மாலை பணிமனையில் இருந்து வந்த மின்சார ரயில் வேக கட்டுப்பாட்டை இழந்து 1ஆவது நடைமேடையில் மோதி அங்கிருந்த 2 கடைகளுக்குள் புகுந்தது.
பயணிகள் யாரும் இல்லாததாலும், கடையும் விடுமுறையில் இருந்ததாலும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்துக்கு காரணமான ரயிலை இயக்கிய ஓட்டுநர் பவித்திரன் மீது கடற்கரை ரயில் நிலைய அதிகாரி அளித்த புகாரின்பேரில் எழும்பூர் ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதையடுத்து தெற்கு ரயில்வே சென்னை கோட்ட மேலாளரின் உத்தரவின்படி ரயில்வே உயர் அதிகாரிகள், ரயில்வே பாதுகாப்பு படை உயர் அதிகாரி உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழு ரயில் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டது.

முதல்கட்ட விசாரணையில் ரயிலில் பிரேக் பிடிக்காமல் பழுதடைந்தது தான் காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், விபத்துக்கு ரயிலை இயக்கிய ஓட்டுநரின் கவனக்குறைவே காரணம் என்று குழுவின் அறிக்கையில் தெரியவந்துள்ளது.
மேலும் ரயிலில் எந்தவித தொழில்நுட்ப கோளாறும் ஏற்படவில்லை என்றும், பிரேக் பழுதாகவில்லை எனவும் விசாரணை குழுவின் அறிக்கையில் தெரியவந்ததாக கூறப்படுகிறது. இந்த அறிக்கையின் அடிப்படையில் ரயில் ஓட்டுநர் பவித்திரன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
newstm.in

