Theme Check

ஊழியர்களுக்கு BMW காரை பரிசளித்த சென்னை ஐ.டி. நிறுவனம் !!

ஊழியர்களுக்கு BMW காரை பரிசளித்த சென்னை ஐ.டி. நிறுவனம் !!

ஊழியர்களுக்கு BMW காரை பரிசளித்த சென்னை ஐ.டி. நிறுவனம் !!
X

நிறுவனத்துக்காக தன்னுடன் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றிய 5 ஊழியர்களுக்கு ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான சொகுசு கார்களை சென்னையை சேர்ந்த மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளர் பரிசாக வழங்கி நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கந்தன்சாவடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் கிஸ்ஃபிளோ என்ற ஐடி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான சுரேஷ் சம்பந்தம் உள்ளார்.

இந்த நிறுவனத்தை தொடங்கியப்போது ஆதி, விவேக், கெளசிக்ராம், பிரசன்னா, தினேஷ் ஆகிய ஐந்து பேரும் பணியில் இணைந்துள்ளனர். அதன்பின்னர் இந்த நிறுவனம் சந்தித்த ஏற்ற, இறக்க நேரங்களிலும் நிறுவனத்துடன் ஐந்து பேரும் பயணித்துள்ளனர். தற்போது இந்நிறுவனம் இந்தியாவில் வருவாய் மற்றும் பிராஜெக்ட் அடிப்படையில் 10வது இடத்தில் இந்த நிறுவனம் இருப்பதாக கூறப்படுகிறது.

bmw

இந்த நிலையில், இந்நிறுவனம் தொடங்கி 10ஆவது ஆண்டு விழாவை சிறப்பிக்கும் வகையிலும் அனைத்து ஏற்ற இறக்கத்திலும் தன்னோடு பயணித்து கம்பெனியின் வளர்ச்சியில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட ஆதி, விவேக், கெளசிக்ராம், பிரசன்னா, தினேஷ் ஆகிய ஐந்து பேருக்கும் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான பிஎம்டபிள்யூ சொகுசு காரை நிறுவனர் சுரேஷ் சம்பந்தம் பரிசாக வழங்கினார். குடும்பத்தோடு வந்து காரை பெற்றுக் கொண்ட ஊழியர்கள் மிகுந்த பெருமிதம் கொண்டனர்.

சாதாரண பார்ட்டி என ஐந்து பேரையும் குடும்பத்துடன் வருமாறு தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான சுரேஷ் சம்பந்தம் அழைத்துள்ளார். ஆனால் அவர்களுக்கு சொகுசு கார் பரிசளித்து எதிர்பார்க்காத நிலையில் இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் சுரேஷ் சம்பந்தம். இது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி(CEO) சுரேஷ் சம்பந்தம் கூறுகையில், கம்பெனி துவங்கியது முதல் தற்போது வரை என்னோடு பயணித்து வரும் ஊழியர்கள் எந்த சூழ்நிலையிலும், அதிக ஊதியம் தருவதாக கூறியும் என்னை விட்டு செல்லாமல் தொடர்ந்து உழைத்தனர். அதற்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களை குடும்பதோடு கெட் டூ கெதர் பார்ட்டி இருப்பதாக வரவழைத்து அவர்களுக்கு கார் பரிசாக வழங்கி இருக்கிறோம். இதன் மதிப்பு சுமார் 1 கோடி என தெரிவித்தார்.
bmw
காரை பரிசாக பெற்ற ஆதி என்பவர் கூறுகையில், என்னிடம் ஒரு முறை விளையாட்டாக கேட்டார் என்ன கார் பிடிக்கும் என்று, நானும் கூறினேன் ஆனால் அந்த காரையே பரிசாக வாங்கி கொடுத்திருக்கிறார் நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை’ என்றார் ஆச்சரியம் விலகாமல்.


newstm.in

Next Story
Share it