Theme Check

சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல் - சென்னை மாநகராட்சி அதிரடி..!!

சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல் - சென்னை மாநகராட்சி அதிரடி..!!

சென்னையில் கொரோனா கட்டுப்பாடுகள் அமல் - சென்னை மாநகராட்சி அதிரடி..!!
X

தமிழ்நாட்டில் குறைந்திருந்த கொரோனா தொற்று, கடந்த சில நாட்களாக அதிகாரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

malls

கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் புதிதாக 2,654 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தின் மொத்த பாதிப்பு 34,85,429 ஆக பதிவாகியுள்ளது. தற்போது 15,616 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும் சென்னையில் கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர மாநாகராட்சி அறிவித்துள்ளது.

1

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், வணிக நிறுவனங்கள் ஒரே நேரத்தில் மக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க வேண்டும். வணிக வளாகங்கள், தியேட்டர்கள், துணிக்கடைகளில் ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என சென்னை மாநாகராட்சி கூறியுள்ளது.

மேலும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை வணிக நிறுவனங்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாநகராட்சி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Next Story
Share it