சென்னை- திருப்பதி விரைவு ரயில்.. பொது பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் !!
சென்னை- திருப்பதி விரைவு ரயில்.. பொது பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் !!

சென்னை - திருப்பதி விரைவு ரயில்களில் பொதுப் பெட்டிகள் நீக்கப்பட்டு, முன்பதிவு பெட்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.
சென்னை சென்ட்ரல் - திருப்பதி இடையே தினமும் 2 விரைவு ரயில் சேவைகள் (வண்டி எண்.16057/58, 16053/54) இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயிலில் 2ஆம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 5 பொதுப் பெட்டிகள் இருந்தன. தற்போது இந்த பொதுப் பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட 2 விரைவு ரயில்கள் வரும் 17ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டு, வரும் 18ஆம் தேதி முதல் ரயில் சேவைதொடங்கும் என்று தெற்கு ரயில்வே தற்போது தெரிவித்துள்ளது. சென்னை - திருப்பதிஇருமார்க்கத்திலும் பயணிகள்இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.
சென்னை- திருப்பதி விரைவு ரயிலில் ஏராளமானோர் பொதுப்பெட்டியில் பயணித்து கோவிலுக்கு சென்று வந்தனர். தற்போது அப்பெட்டிகள் நீக்கப்பட்டுள்ளதால், கோவிலுக்கு செல்லும் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும், பொதுப் பெட்டிகளை இணைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
newstm.in

