Theme Check

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.. திடீர் அறிவிப்பு..! !

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.. திடீர் அறிவிப்பு..! !

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு.. திடீர் அறிவிப்பு..! !
X

சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஜூன் 2ஆம் தேதி தொடங்கவிருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதுகுறித்து சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 2ஆம் தேதி முதல் தொடங்க வேண்டிய தேர்வுகள், ஜூன் 15ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த அறிவிப்பு சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும் பொருந்தும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

medras university

எனினும் எந்த காரணத்துக்காக தேர்வு ஒத்திவைக்கப்பட்டது என தெரிவிக்கப்படவில்லை. இதனால் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரத்தில் தேர்வுக்கு படிக்க கூடுதல் நாட்கள் கிடைத்துள்ளதாகவும் மாணவர்கள் கூறுகின்றனர்.

சென்னையில் இருக்கும் முக்கியமான பல்கலைக்கழங்களில் ஒன்றாகவும் பாரம்பரிய பல்கலைக்கழகமாகவும் சென்னை பல்கலைக்கழகம் கருதப்படுகிறது. இது 1851ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது.

newstm.in

Next Story
Share it