சென்னை எனது மற்றொரு தாய் வீடு : தோனி மீண்டும் நெகிழ்ச்சி!!
சென்னை எனது மற்றொரு தாய் வீடு : தோனி மீண்டும் நெகிழ்ச்சி!!

திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் 25ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்வு சென்னை எம்ஆர்சி நகரில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளரும், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன தலைவருமான சீனிவாசன் மற்றும் திருவள்ளூர் மாவட்ட கிரிக்கெட் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
கிரிக்கெட், டேபிள் டென்னிஸ் , சதுரங்கம் , கால்பந்து , தடகளம் , மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி பந்தயம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கும் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீராங்கனைகளுக்கு தோனி விருதுகளை வழங்கினார்.

அதன்பின்னர் பேசிய அவர், மாவட்ட கிரிக்கெட் சங்க கூட்டத்தில் தான் பங்கேற்பது இதுதான் முதன்முறை என்றும், சென்னையில் இருந்தபடி தனது ராஞ்சி மாவட்ட கிரிக்கெட் சங்கத்திற்கு நன்றி செலுத்துகிறேன் என்று கூறினார்.
பள்ளியளவிலான கிரிக்கெட் விளையாட்டிலிருதே நான் கிரிக்கெட்டை கற்றுக் கொண்டேன். மாவட்ட அளவிலான போட்டிகள் மூலம் பல வீரர்கள் உருவாகியுள்ளளர். மாவட்டளவிலான போட்டியில் சிறப்பாக விளையாடினால் தேசிய அளவிலான போட்டியில் விளையாட வாயப்பு கிடைக்கும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர் சென்னையை தனது இன்னொரு வீடாக கருதுகிறேன் என்று கூறினார். திறமையான வீர்ர்களை உருவாக்குவதில் மாவட்ட கிரிக்கெட் அமைப்புகளுக்கு பொறுப்புகள் அதிகம். கிரிக்கெட்டில் பெண்களின் பங்களிப்பும் அவசியம் இருக்க வேண்டும் என்று தோனி தெரிவித்தார்.
newstm.in

