Theme Check

சென்னை அணியின் முதல் வெற்றி..!!

சென்னை அணியின் முதல் வெற்றி..!!

சென்னை அணியின் முதல் வெற்றி..!!
X

ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் நேற்று மோதின.

இந்த போட்டிக்கான டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.முதலில் களமிறங்கிய சிஎஸ்கே அணி பந்துகளை எதிர்கொள்ள திணறியது. சிஎஸ்கே 150+ ரன்களை தொடுவதே பெரிய விஷயமாக இருக்கும் எனக் கருதப்பட்டது. பவர் பிளேவில் 35 ரன்கள்தான் சேர்ந்தது.இந்த சமயத்தில் பார்ட்னர்ஷிப் அமைத்த ராபின் உத்தப்பா, ஷிவம் துபே இருவரும் தொடர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்க ஆரம்பித்தனர். இறுதியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 216/4 ரன்களை குவித்தது. ராபின் உத்தப்பா 88 (50), ஷிவம் துபே 95 (46) ஆகியோர் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார்கள்.

அதன் பின், களமிறங்கிய ஆர்சிபி அணியில் ஒருவர் கூட பெரிய ஸ்கோர் அடிக்கவில்லை. அதிகபட்சமாக ஷாபஸ் அகமது 41 (27), அறிமுக வீரர் பிரபுதேசாய் 34 (18) போன்றவர்கள் ரன்களை சேர்த்தனர். இறுதியில் தினேஷ் கார்த்திக் 34 (14) ஓரளவுக்கு பங்களிப்பு செய்திருந்தார். இறுதியில் ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 193/9 ரன்கள் சேர்த்து, 23 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. சிஎஸ்கே இந்த சீசனில் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

Tags:
Next Story
Share it