செஸ் ஒலிம்பியாட் : பிரதமர் படம் கருப்பு மை பூசி அழிப்பு!!
செஸ் ஒலிம்பியாட் : பிரதமர் படம் கருப்பு மை பூசி அழிப்பு!!

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர பதாகைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பாஜகவினர் ஒட்டிய நிலையில், அதனை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மை பூசி அழித்தனர்.
செஸ் ஒலிம்பியாட் போட்டியை பிரபலப்படுத்தும் விதமாக தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகின்றனது. இந்நிலையில், தமிழக அரசின் விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் புறக்கணிக்கப்படுவதாக பாஜக தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனையடுத்து தமிழக அரசு செய்த விளம்பரங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படத்தை பாஜகவின் விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவின் தலைவர் அமர் பிரசாத் தலைமையில் பாஜகவினர் ஒட்டினர்.
இந்திய பிரதமரின் புகைப்படத்தைக் கூட போடாத நிலையை மாற்றிடவும், மக்கள் விரோத திமுக அரசுக்கும், திமுக அரசு செய்யும் தவறான செயல்களுக்கு துணை நிற்கும் அதிகாரிகளுக்கும் தவறை உணர்த்தி திருத்திடும் விதமாக பிரதமரின் புகைப்படத்தை ஒட்டியதாக அவர்கள் கூறினர்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகைகளில் பாஜகவினர் ஒட்டிய பிரதமர் மோடியின் புகைப்படங்களை தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் மை பூசி அழித்தனர்.
newstm.in