Theme Check

ஓடும் பஸ்சில் ஓட்டுநருக்கு நெஞ்சு வலி.. சென்டர் மீடியனில் மோதி 55 உயிரை காப்பாற்றிய பயணி..!

ஓடும் பஸ்சில் ஓட்டுநருக்கு நெஞ்சு வலி.. சென்டர் மீடியனில் மோதி 55 உயிரை காப்பாற்றிய பயணி..!

ஓடும் பஸ்சில் ஓட்டுநருக்கு நெஞ்சு வலி.. சென்டர் மீடியனில் மோதி 55 உயிரை காப்பாற்றிய பயணி..!
X

ஈரோட்டில், ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பேருந்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாமர்த்தியமாக செயல்பட்ட பயணி ஒருவர் பேருந்தை சென்டர் மீடியனில் மோதவிட்டு பயணிகளை காப்பாற்றினார்.

சேலத்தில் இருந்து ஈரோடு வழியாக திருப்பூர் செல்லும் அரசுப் பேருந்து வழக்கம்போல் ஈரோடு பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 53 பேர் பயணித்தனர்.

இந்நிலையில், ஈரோடு திண்டல் அருகே பேருந்து சென்று கொண்டிருந்தபோது, பேருந்தை இயக்கிய ஓட்டுனருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. வலி தாங்க முடியாத ஓட்டுநர், பேருந்தை இயக்க முடியாமல் இருக்கையில் சாய்ந்துள்ளார்.
ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு நெஞ்சு வலி - சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்திய  பயணி
இதனால், பேருந்து கட்டுப்பாட்டை இழந்த நிலையில், இருக்கையில் அமர்ந்திருந்த திருப்பூரைச் சேர்ந்த பயணி ஒருவர் உடனடியாக இருக்கையில் இருந்து எழுந்து ஓட்டுநர் அருகே சென்றார்.

பின்னர், பேருந்தை நிறுத்த முயன்ற அவர், ஸ்டியரிங்கை பிடித்து வளைத்து பேருந்தை சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியனில் மோத வைத்தார். பயங்கர சத்தத்துடன் சென்டர் மீடியனில் மோதிய பேருந்து நின்றது.
ஓடும் பேருந்தில் ஓட்டுநருக்கு நெஞ்சு வலி - சாமர்த்தியமாக பேருந்தை நிறுத்திய  பயணி
உடனடியாக பேருந்து ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசிமோகன், அங்கு ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை சரி செய்தார்.

சாமர்த்தியமாகச் செயல்பட்டு, பேருந்தை சென்டர் மீடியனில் மோதவிட்டு ஓட்டுநர், கண்டக்டர் உட்பட 55 பேரின் உயிரைக் காப்பாற்றிய திருப்பூர் பயணியை அனைவரும் வெகுவாக பாராட்டினர்.
Next Story
Share it