Theme Check

8 ஆண்டுகள் பதுங்கியிருந்த கொலை குற்றவாளியை சிக்க வைத்த சிக்கன் பகோடா!!

8 ஆண்டுகள் பதுங்கியிருந்த கொலை குற்றவாளியை சிக்க வைத்த சிக்கன் பகோடா!!

8 ஆண்டுகள் பதுங்கியிருந்த கொலை குற்றவாளியை சிக்க வைத்த சிக்கன் பகோடா!!
X

சென்னை புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த குணசுந்தரி கணவனை இழந்து, 7 வயது மகனுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஆந்திராவைச் சேர்ந்த ராஜா என்பவரை குணசுந்தரி இரண்டாவது திருமணம் செய்ததாகக் கூறப்படுகிறது.

அதன்பிறகு கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும் அடிக்கடி சண்டை வந்தது. சுந்தரி மீது சந்தேகம் அடைந்த ராஜா, அவரையும், அவரது 7 வயது மகனையும் கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் ராஜா குற்றவாளி என்பதை உறுதி செய்தனர். புதுவண்ணாரப்பேட்டை போலீஸார் தனிப்படை அமைத்து ராஜாவைத் தேடிவந்தனர். கொலை செய்துவிட்டு தப்பியோடிய ராஜா, தலைமறைவாக இருந்து வந்தார்.

chicken pakoda

இதனிடையே நடத்தப்பட்ட விசாரணையில் சுந்தரி உட்பட 15 பேரை ராஜா ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்தது. இந்நிலையில், ஆந்திரா மாநிலம் சத்தியவேடு பகுதியில் உள்ள சிக்கன் பக்கோடா கடைக்கு ராஜா அடிக்கடி வருவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து மாறுவேடத்தில் சென்ற போலீஸார் , 8 ஆண்டுகளுக்குப் பிறகு கொலைக் குற்றவாளியான ராஜாவை சுற்றிவளைத்து கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it