முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.. நாளை முதல் தொடங்குகிறேன் !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.. நாளை முதல் தொடங்குகிறேன் !

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனையடுத்து அரசியல் கட்சித் தலைவர்கள் தங்கள் பிரச்சாரத்தை தொடங்க உள்ளனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளளது.
இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி சார்பில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து, தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 'உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி' என்ற காணொளி பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

காணொளி தேர்தல் பிரச்சாரம் குறித்த விவரங்கள் பின்வருமாறு, பிப்ரவரி 6- ஆம் தேதி கோவை, பிப்ரவரி 7- ஆம் தேதி சேலம், பிப்ரவரி 8- ஆம் தேதி கடலூர், பிப்ரவரி 9- ஆம் தேதி தூத்துக்குடி, பிப்ரவரி 10- ஆம் தேதி ஈரோடு, பிப்ரவரி 11- ஆம் தேதி கன்னியாகுமரி, பிப்ரவரி 12- ஆம் தேதி திருப்பூர், பிப்ரவரி 13- ஆம் தேதி திண்டுக்கல், பிப்ரவரி 14- ஆம் தேதி மதுரை, பிப்ரவரி 15- ஆம் தேதி தஞ்சை, பிப்ரவரி 17- ஆம் தேதி திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் காணொளி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார், இவ்வாறு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in

