Theme Check

மாணவர்களை ஊக்கப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்..!!

மாணவர்களை ஊக்கப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்..!!

மாணவர்களை ஊக்கப்படுத்திய முதல்வர் ஸ்டாலின்..!!
X

புது டெல்லியில் அரசுப் பள்ளிகளை டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவாலுடன் பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் கூறியுள்ளதாவது,

”டெல்லியில் இன்று பள்ளியைப் பார்வையிட்டபோது, அங்கு மாணவர்களின் திறன்களை ஊக்குவிக்கும் BusinessBlasters முன்னெடுப்பைக் கண்டு மகிழ்ந்தேன். மாணவர்களும் ஆசிரியர்களும் தங்களது அன்பால் என்னை நனையச் செய்துவிட்டனர். தலைவர் கலைஞரின் ஓவியத்தை ஆசிரியை ஒருவர் வழங்கியபோது, நெகிழ்ந்தேன்.

தமிழக மாணவர்களும் ஆசிரியர்களும் பாடப்புத்தகங்களைக் கடந்து தங்களது அறிவையும் திறனையும் இன்னும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். சன்னலுக்கு வெளியேதான் உலகம் இருக்கிறது! அதனை உங்கள் திறமையினால் புதுமைப்படுத்துங்கள்! செழுமைப்படுத்துங்கள்" என்று தெரிவித்துள்ளார்.

தங்கள் பள்ளிக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மாணவிகள் ரோஜா மலர் கொடுத்து அன்புடன் வரவேற்றனர். உடன் மக்களவை உறுப்பினர் டி.ஆர்.பாலு, தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் சென்றிருந்தனர். டெல்லி அரசுப் பள்ளியில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை விரைவில் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளிலும் செயல்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆர்வமாக உள்ளார் என்று தெரிய வந்துள்ளது.


Next Story
Share it