உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் ..!!
உக்ரைனில் உள்ள தமிழக மாணவர்களிடம் பேசிய முதல்வர் ஸ்டாலின் ..!!

உக்ரைனில் ரஷ்ய படைகள் மூன்றாவது நாளாக தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகின்றது. இதனால் உக்ரைனில் உள்ள பல இந்திய மாணவர்கள் சொந்த ஊர் திரும்ப கடும் சவால்களை சந்திக்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
உக்ரைனில் உள்ள முக்கிய நகரங்களை ரஷ்யா கைப்பற்றி வரும் நிலையில், அங்குள்ள இந்திய மாணவர்கள் ஊர் திரும்ப முடியாமல் சிக்கி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் உக்ரைனில் உள்ள தமிழ்நாடு மாணவர்களை மீட்பதற்காக சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் மாணவர்களிடம் வீடியோ கால் மூலம் உரையாடினார். திருச்சியை சேர்ந்த மாணவரிடம் பேசிய முதல்வர் அங்குள்ள சூழ்நிலை குறித்து கேட்டறிந்தார். அவர்களை தைரியமாக இருக்கும்படி கூறிய முதல்வர், அவர்கள் அனைவரையும் விரைவில் இந்தியா அழைத்து வர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

