Theme Check

காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!

காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!

காவல்துறை உயர் அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை..!
X

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் உள்துறை செயலர், சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர், சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திரபாபு, காவல்துறையின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், வரும் 9 மற்றும் 10-ம் தேதிகளில் உள்துறை மீதான மானிய கோரிக்கை நடைபெற உள்ள நிலையில், காவல்துறை உயர் அதிகாரிகளிடம் கருத்துக்களை கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தவிர, விசாரணை கைதி விக்னேஷ் மரண வழக்கு தொடர்பாக சிபிசிஐடி டிஜிபி ஷகீல் அக்தர் உடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
Next Story
Share it