Theme Check

அதுக்காக இரு குழந்தைகளை கொன்ற சித்தப்பா.. சரியான தண்டனை அளித்த நீதிமன்றம் !

அதுக்காக இரு குழந்தைகளை கொன்ற சித்தப்பா.. சரியான தண்டனை அளித்த நீதிமன்றம் !

அதுக்காக இரு குழந்தைகளை கொன்ற சித்தப்பா.. சரியான தண்டனை அளித்த நீதிமன்றம் !
X

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்பொம்மையாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதிமுத்து. இவர் அதே பகுதியைச் சேர்ந்த சகோதரிகள் இருவரை திருமணம் செய்துள்ளார். முதல் மனைவி உ‌ஷாராணிக்கு சீமோன் அல்போன்ஸ் மைக்கிள் (14) என்ற மகனும், மகாலட்சுமிக்கு எட்வின் ஜோசப் (9) என்ற மகனும் இருந்தனர்.

இரு மனைவிகளுடன் இவர் குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில், ஜோதிமுத்துவின் தம்பி ரத்தினராஜுக்கும் (37), மகாலட்சுமிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனால் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

kallakadhal

வீட்டில் தனிமையில் இருப்பதற்கு குழந்தைகள் இடையூறாக இருப்பதாக ரத்தினராஜ் கருதியுள்ளார். இதனால் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் சிறுவர்கள் சீமோன் அல்போன்ஸ் மைக்கிள், எட்வின் ஜோசப் ஆகிய இருவரையும் குளிப்பதற்காக ஊருக்கு தெற்குப் பகுதியில் உள்ள கிணற்றுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு 2 சிறுவர்களையும் கிணற்றில் தள்ளி கொலை செய்துள்ளார்.

உறவினர்கள் சிறுவர்களைத் தேடியபோது, கிணற்றுக்கு அருகே அவர்களது உடைகள், செருப்புகள் கிடந்துள்ளன. முத்துக் குளிக்கும் மீனவர்கள் உதவியுடன் சிறுவர்களின் உடல்கள் மீட்கப்பட்டன.

இது குறித்து தகவல் அறிந்துசென்ற விளாத்திகுளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கள்ளக்காதல் விவகாரம் தெரிந்து ரத்தினராஜை அழைத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். ஆனால் அவர் தலைமறைவானார். பின்னர் தலைமறைவாக இருந்த ரத்தினராஜை கைது செய்தனர். அப்போது சிறுவர்களை அவர் கொலை செய்தது தெரியவந்தது.

kallakadhal

தூத்துக்குடி 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணை நிறைவடைந்து, ரத்தினராஜிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி பிலிப் நிக்கோலஸ் அலெக்ஸ் நேற்று தீர்ப்பளித்தார். ‘இரண்டு ஆயுள் தண்டனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக ரத்தினராஜ் அனுபவிக்க வேண்டும். வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும்’ எனநீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

newstm.in

Next Story
Share it