நடுவானில் விமானத்தில் சிகரெட் பிடித்த விமானி.. பயணிகள் 66 பேரும் உயிரிழந்த சோகம் !!

நடுவானில் விமானத்தில் சிகரெட் பிடித்த விமானி.. பயணிகள் 66 பேரும் உயிரிழந்த சோகம் !!

நடுவானில் விமானத்தில் சிகரெட் பிடித்த விமானி.. பயணிகள் 66 பேரும் உயிரிழந்த சோகம் !!
X

பாரிஸில் இருந்து கெய்ரோ நோக்கி எகிப்து நாட்டு விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. வானில் பாதித்தூரம் சென்ற அந்த விமானம் கடல் மேல் பறந்துகொண்டிருந்தபோது அதன்பிறகு கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால் விமானம் எங்கு சென்றது? என்ன ஆனது ? என தெரியாமல் இருந்தது. பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் விமானம் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 66 பேரும் உயிரிழந்தனர். கிரீஸ் அருகே கடலில் விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. விபத்து நடந்த போது, ​​தீவிரவாத தாக்குதலால் விபத்து ஏற்பட்டதாக எகிப்து அதிகாரிகள் கூறினர்.

egupt plane

இந்த விபத்து கடந்த 2016ஆம் ஆண்டு நடந்தது. விமானம் விபத்துக்குள்ளாகி சுமார் 6 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இந்த விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் நாட்டு விமான போக்குவரத்து நிபுணர்கள் வெளியிட்ட அறிக்கையில், எகிப்து விமானத்தின் விமானி சிகரெட் பிடித்ததால் விபத்து ஏற்பட்டது. விமானிகளுக்கான அறையில் இருந்த விமானத்தின் விமானி ஒருவர், சிகரெட் பற்றவைப்பதற்காக லைட்டரை பற்ற வைத்துள்ளார். அப்போது விமானத்தில் இருந்த அவசர முகக் கவசத்தில் இருந்து ஆக்ஸிஜன் கசிந்தது. இதனால் ஏற்பட்ட தீப் பொறியானது, விமானியின் அறையில் பரவியது.

egupt plane

மேலும் விமானத்திலும் பரவியதால் கோரமான விபத்து ஏற்பட்டது. அதன் பின் அந்த விமானம் மத்தியதரைக் கடலில் விழுந்தது. அதில் இருந்த 66 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்தில், 40 எகிப்தியர்களும், 15 பிரான்ஸ் குடிமக்களும் உயிரிழந்தனர், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


newstm.in

Tags:
Next Story
Share it