சிகரெட் பிடிப்பதில் தகராறு.. சிறுவன் அடித்துக்கொலை !!
சிகரெட் பிடிப்பதில் தகராறு.. சிறுவன் அடித்துக்கொலை !!

சிகரெட் பிடித்ததால் ஏற்பட்ட தகராறில் 17 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் வடமேற்கு பகுதியான மங்கோல்புரி பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன், ஊருக்கு வெளியே ஒரு வீட்டின் அருகே யாருக்கும் தெரியாமல் சிகரெட் பிடித்துள்ளான். அந்த வீட்டில் வசித்துவந்த 17 வது மற்றோரு சிறுவன், இங்கெல்லாம் சிகரெட் புகைக்க கூடாது என புகைப்பிடித்த சிறுவனை எச்சரித்துள்ளான்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் உண்டானது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறி இரண்டு சிறுவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கியுள்ளனர். ஆத்திரத்தின் உச்சத்தில் வீட்டிற்கு உரிமையாளரான அந்த சிறுவன், சிகரெட் பிடித்த சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான்.

பின்னர், இறந்த சிறுவனின் உடலை ஒரு பையில் போட்டு சாலையோரத்தில் தூக்கி வீசியுள்ளான். சிறிது நேரத்துக்கு பிறகு கழுத்தில் வெட்டு காயங்களுடன் அடையாளம் தெரியாத உடல் ஒரு பையில் அடைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். தீவிர விசாரணைக்கு பிறகு சிறுவர்கள் இடையேயான சிகரெட் மோதல் கொலையில் முடிந்தது தெரியவந்துள்ளது. மேலும் அக்கம்பக்கத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் தற்போது அந்த சிறுவனை கைது செய்தனர்.
newstm.in

