குடிமகன்கள் அதிர்ச்சி!!மதுபாட்டிலுக்குள் மிதந்த குட்டித்தவளை!
குடிமகன்கள் அதிர்ச்சி!!மதுபாட்டிலுக்குள் மிதந்த குட்டித்தவளை!

நெல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் பாண்டி (51). கூலித்தொழில் செய்து வரும் இவர், நெல்லூர் அருகில் உள்ள சித்தரேவு அரசு டாஸ்மாக் மதுபான கடைக்கு சென்றார். ரூ.150 கொடுக்கு குவாட்டர் மதுபான பாட்டிலை வாங்கியுள்ளார்.

அதன் பின்னர் மதுபானத்தை குடிப்பதற்காக அதை திறக்க முற்பட்ட போது, பாட்டிலின் உள்ளே ஏதோ ஒன்று மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பிறகு அது என்னவாக இருக்கும் என்று உன்னிப்பாக பார்த்த போது அது ஒரு இறந்து போன குட்டித்தவளை என்பது தெரிய வந்தது.

இதனால் ஆத்திரமடைந்த பாண்டி, இதுகுறித்து சித்தரேவு டாஸ்மார்க் கடையின் விற்பனையாளரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பாண்டிக்கு சரியான முறையில் பதில் அளிக்காமல், வேறு பாட்டில் வேண்டுமென்றாலும் தருகிறேன் என்று சமரசம் பேசி உள்ளார். இதனால் டாஸ்மாக் கடையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மதுபான பாட்டிலுக்குள் குட்டித் தவளை மிதந்த சம்பவம் மது பிரியர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

