Theme Check

கோவில் திருவிழாவில் மோதல்… பெண் படுகொலை!!

கோவில் திருவிழாவில் மோதல்… பெண் படுகொலை!!

கோவில் திருவிழாவில் மோதல்… பெண் படுகொலை!!
X

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோவில் திருவிழாவில் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட தகராறில் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செல்லிப்பாளையம் அம்பேத்கர் நகரில் உள்ள மாரியம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றது. அம்மன் வீதி உலா நிகழ்ச்சிக்காக சாமி சிலையை யாருடைய டிராக்டரில் ஏற்றுவது என்பது தொடர்பாக பிரச்னை எழுந்தது.

அதே பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர், கார்த்திக் ஆகியோருக்கும், மற்றொரு தரப்பான வினோத் என்பவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

trc

இந்நிலையில் சந்திரசேகரும் அவருடைய தம்பி கார்த்திக்கும் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த அருள், முரளிதரன் ஆகிய இருவரும் சேர்ந்து பிரசாந்த், வினோத் மற்றும் உறவினர் பாண்டியன் ஆகியோரை தாக்கினர்.

மகன்கள் தாக்கப்படுவதைக் கண்ட அவர்களுடைய தாயார் சிவகாமி, சண்டையை விலக்கி விடச் சென்றுள்ளார். அப்போது அவரும் தாக்குதலுக்குள்ளாகி கீழே விழுந்து காயமடைந்த நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

trc murder

இது குறித்து தகவலறிந்த போலீஸார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து சிவகாமியின் உடலை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Next Story
Share it