12ஆம் வகுப்பு மாணவர்களே... இன்று முதல் ஹால் டிக்கெட்!!
12ஆம் வகுப்பு மாணவர்களே... இன்று முதல் ஹால் டிக்கெட்!!

தமிழகத்தில், கடந்த மே மாதம் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு, ஜூன் 20ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில், பொதுத் தேர்வு எழுதாதவர்கள், தேர்வுகளில் தோல்வி அடைந்தவர்களுக்கான துணைத்தேர்வு வரும் 25ஆம் தேதி நடைபெற உள்ளது.
12ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் அதற்கான ஹால் டிக்கெட்டுகளை http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, தமிழகம், புதுச்சேரியில் 93.76% மாணவ, மாணவிகள் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தனர். 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 8,06,277 பேரில் 7,55,998 மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
Next Story

